தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து வலுவிழந்த கொள்ளிடம் ஆற்றின் கரையை கலெக்டர் ஆய்வு
அளக்குடியில், தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து வலுவிழந்த கொள்ளிடம் ஆற்றின் கரையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் கான்கிரீட் தடுப்புச்சுவர் இருந்தது. இந்த தடுப்புச்சுவர் கடந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 100 மீட்டர் தூரத்துக்கு இடிந்து விழுந்தது. இதனால் ஆற்றின் கரை உடைந்தது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக கரையின் உடைப்பு சரி செய்யப்பட்டது.
இதன்பின் அந்த உடைப்பு நிரந்தரமாக சரி செய்யப்படாததால் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை வலுவிழந்தது. தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் அளக்குடி கிராமத்துக்கு நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து வலுவிழந்த கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர், அளக்குடியில் உள்ள புயல் மற்றும் வெள்ள பாதுகாப்பு மையம், தற்காஸ் கிராமத்தில் கிட்டியணை உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் ஆற்றில் மழைநீர் அதிகமாக சென்றால் அதை எளிதில் வடிய வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் சாந்தி, ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஜான்சன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.