காளையார்கோவிலில் வெடி வெடித்து காட்டிய போது தீப்பொறி பறந்து 2 பட்டாசு கடைகள் சாம்பல்; 2 பேர் காயம்
காளையார்கோவிலில் வெடி வெடித்து காட்டிய போது தீப்பொறி பறந்து விழுந்ததில் 2 பட்டாசு கடைகள் சாம்பலானது. ஜவுளிக்கடையும் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (35). இவர்கள் காளையார்கோவில் பஸ் நிலையம் எதிரில் அருகருகே தற்காலிகமாக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு 2 கடைகளிலும் வியாபாரம் நடந்து கொண்டிருந்த போது, வாடிக்கையாளர்களுக்கு பட்டாசின் விதங்கள் குறித்து காட்டுவதற்காக, பட்டாசு கடை முன்பு சில வெடிகளை வெடித்து காட்டினராம்.
அப்போது தீப்பொறி பறந்து, சுந்தரத்தின் பட்டாசுக்கடையில் விழுந்தது.
அப்போது தீப்பொறி பட்டாசுகளின் மீது பட்டதில், அவை வெடித்து சிதறின. அவ்வாறு வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் இருந்த மற்றொரு பட்டாசு கடை மற்றும் ஜவுளிகடையிலும் விழுந்தது. அதில் அந்த கடையில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. மேலும் ஜவுளிக்கடையிலும் தீ பரவியது.
இந்தநிலையில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் மிக அருகிலேயே இருந்ததால், அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பட்டாசு மற்றும் ஜவுளிக்கடையில் இருந்த 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 2 பட்டாசு கடைகளும் சாம்பலானது. ஜவுளிக்கடையிலும் சேதம் ஏற்பட்டது.