பெருந்துறையில் லாரி மோதி டிரைவர் பரிதாப சாவு
பெருந்துறையில் லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
பெருந்துறை,
சென்னையில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு புதிய கார்களை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய கன்டெய்னர் லாரி சென்றுகொண்டு இருந்தது. பஞ்சாப் மாநிலம் தான்டர் நந்துதாக் பகுதியை சேர்ந்த குருஜித்சிங் (வயது 40) என்பவர் லாரியை ஓட்டினார்.
பெருந்துறை சந்தைப்பேட்டை அருகே வந்தபோது, லாரியை ரோட்டின் ஓரமாக குருஜித்சிங் நிறுத்தினார். பின்னர் எதிர்பக்கம் செல்வதற்காக ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி குருஜித்சிங் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கிய குருஜித்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து நடந்ததும் லாரி டிைரவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றார்கள். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். லாரி டிரைவர் ஒருவர் லாரியிலேயே அடிபட்டு இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.