அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

கரூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர்.

Update: 2019-10-26 23:00 GMT
கரூர்,

நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற் படிப்பு பணியிடங்களுக்கு முறையான வெளிப்படை யான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப் பினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங் கினர். கரூர் மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் நேற்று முன் தினம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் புறநோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். சங்கத்தின் மாநில நிர்வாகி களுடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாமல் போனது. அரசு டாக்டர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.

செவிலியர்கள் சிகிச்சை

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அரசு டாக்டர்கள் நேற்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியில் இல்லை. இதனால் அங்கிருந்த செவிலி யர்கள் நோயாளி களுக்கு பொது மருத்துவ சிகிச்சையை அளித்தனர். டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையில் கோரிக்கை களை வலியுறுத்தி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவின் முன்பு அரசு டாக் டர்கள் சங்கங்களின் கூட் டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். ஒரு சிலர் முகத்தில் கருப்பு துணி கட்டி அமர்ந்திருந்தனர். முதல்- அமைச்சர் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி அரசு டாக்டர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்