நிதி நிறுவன உரிமையாளர் கொலையில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2019-10-25 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 30). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி இரவு காலேஜ் ரோடு காவேரி ரோடு பிரிவு அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் ராயபுரம் மிலிட்டரி காலனியை சேர்ந்த நந்தகுமார்(21), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாக்கியாநகரை சேர்ந்த முத்துக்குமார்(22), செங்கல்பட்டு செம்மனாஞ்சேரியை சேர்ந்த பாலாஜி(23) உள்பட 5 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் நந்தகுமார், முத்துக்குமார், பாலாஜி ஆகிய 3 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மேற்பார்வையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் நேற்று நந்தகுமார், முத்துக்குமார், பாலாஜி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள 3 பேரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்