விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குடோனில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 275 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 344 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 344 கட்டுப்பாட்டு கருவிகளும், 358 வி.வி.பேட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகிய அனைத்தும் நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் அந்த எந்திரங்கள் அனைத்தும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு அங்குள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த குடோனை தேர்தல் பொது பார்வையாளர் சினுவீரபத்ருடு முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், பூட்டி ‘சீல்’ வைத்தார். அப்போது தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகர், விக்கிரவாண்டி தாசில்தார் பார்த்திபன், தேர்தல் துணை தாசில்தார்கள் சிவா, அரிதாஸ், வருவாய் உதவியாளர்கள் பாரதிதாசன், தஸ்தகீர் உள்பட பலர் உடனிருந்தனர்.