கிணத்துக்கடவு பஸ் நிலையம்- அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

கிணத்துக்கடவு பஸ்நிலையம்- அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-10-25 22:45 GMT
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட தினசரி காய்கறி சந்தை பகுதியில் ரூ. 1கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகளை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டார். அப்போது அவர், வாரச்சந்தை பகுதியில் குடிப்பதற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் அவர், அங்கிருந்து கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதியும், கூடுதலாக இருக்கைகளும் ஏற்படுத்திகொடுக்க பேரூராட்சி செயல் அலுவலர் கதிர்வேலுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர், கிணத்துக் கடவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்கள் குறித்த முழு விவரங்களை தெரிவிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் அங்குள்ள சத்துணவு கூடத்துக்கு சென்று, அமைப்பாளரிடம் எத்தனை பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்று கேட்டறிந்தார். அதற்கு அந்த அமைப்பாளர் 317 என்றார். ஆனால் அவர்கள் அத்தனை பேருக்கும் சமைத்த சத்துணவு சாப்பாடு போதுமா? என கேள்வி எழுப்பினார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு அந்த சாப்பாட்டை பரிமாற செய்து, பற்றாக்குறை உள்ளதா? என்று பார்வையிட்டார். மேலும் மாணவர்களுக்கு டிபன்பாக்கில் சாப்பாடு கொடுக்காமல், தட்டில்தான் பரிமாற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் இதனை பள்ளி தலைமை ஆசிரியகிருஷ்ணமூர்த்தி கண்காணிக்கவேண்டும் என்றார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், உதவிபொறியாளர் சேகரன், கிணத்துக்கடவு பேரூராட்சிசெயல் அலுவலர் கதிர்வேல், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், மற்றும் பலர் உடன்இருந்தனர்.

மேலும் செய்திகள்