மஞ்சூரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறப்பு: அதிகாரிகளை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
மஞ்சூரில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்த அதிகாரிகளை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர், எடக்காடு, பெங்கால்மட்டம், எமரால்டு, தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் பொதுமக்களின் போராட்டத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் மூடப்பட்டது. தற்போது பிக்கட்டி பகுதியில் மட்டும் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் மஞ்சூர் பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி மஞ்சூர்-ஊட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் பரவியதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். மேலும் அவர்கள் அனைவரும் இங்கு டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு திரண்ட மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என்று அவர்களும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், ஒரு மாதத்திற்குள் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், அதனால் அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்லும்படியும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை அடுக்கி வைக்கும் பணி தொடங்கியது.
அப்போது அங்கு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராமச்சந்திரனின் மனைவி சாரதாமணி என்பவர் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் அவர், இந்தப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்றும், அதிகாரிகளையும் கண்டித்தும் மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்த போலீசார், சாரதாமணியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கியதோடு, அவரின் மேல் தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அந்தப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களை கலைந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தனர். பெண் ஒருவர், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ராமச்சந்திரன், அவரது மனைவி சாரதாமணி, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் லட்சுமணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து மதுக்கடையை மூட வலியுறுத்தி மனு கொடுக்க சென்றனர். அப்போது சாரதாமணி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.