கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி இருந்த 2 தனியார் பள்ளிகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
நாமக்கல் நகராட்சியில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில், வளாகத்தில் மழைநீர் தேங்கி இருந்த 2 தனியார் பள்ளிகளுக்கு ரூ.40 ஆயிரம் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாகாத வகையில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர்.
இதனை மீறி கொசுப்புழு உற்பத்திக்கு வழிவகுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில் சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தனியார் பள்ளிகள், லாரி பட்டறைகள், அரசு போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட இடங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
அபராதம்
இந்த ஆய்வின் போது 2 தனியார் பள்ளி வளாகங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நிற்பது தெரியவந்தது. இதையடுத்து ஒரு பள்ளிக்கு ரூ.30 ஆயிரம், மற்றொரு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் 20 லாரி பட்டறைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்த நிறுவனங்களுக்கு மொத்தமாக ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.