நல்லம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

நல்லம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்.

Update: 2019-10-24 22:15 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது லளிகம் கிராமம். இந்த கிராமத்தில் புதுவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். கட்டிட மேஸ்திரி.

இவருடைய மகள் கவிநிலா (வயது 6). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக கவிநிலாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் குணமாகவில்லை.

பலி

இந்தநிலையில் நேற்று காலையில் காய்ச்சல் கடுமையானது. உடனே தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிநிலா இறந்தாள். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்