மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ‘தினத்தந்தி’ நல்வழி காட்டி வருகிறது முதன்மை கல்வி அதிகாரி பேச்சு

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ‘தினத்தந்தி’ நல்வழி காட்டி வருகிறது என்று முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன் கூறினார்.

Update: 2019-10-24 22:45 GMT
நாகப்பட்டினம்,

நான் பிறப்பதற்கு முன்பே ‘தினத்தந்தி’ புகழ்பெற்று விளங்கி வருகிறது. பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் ‘தினத்தந்தி’ மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த கல்வி நிதியை வழங்கி வருகிறது. ‘தினத்தந்தி’ இன்று சிறந்த பத்திரிகையாக விளங்கி வருகிறது.

மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் நல்வழி காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த கல்வி நிதி மாணவர்களை பெரிதும் ஊக்குவிக்கும். மேலும் மாணவர்களின் வெற்றிக்கு என்னென்ன வழிகளில் பங்காற்ற வேண்டுமோ அந்த வழிகளில் ‘தினத்தந்தி’ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வினா-விடை புத்தகம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் தினத்தந்தி சார்பில், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வினா-விடை புத்தகம் தயாரித்து வழங்கியும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு வினா-விடை தயாரித்து வழங்கியும், சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பாராட்டுவதும் என பல்வேறு பணிகளை அயராது திறம்பட செய்து வருகிறார்கள். அவர்களின் இந்த பணியை மனதார பாராட்டுகிறேன்.

மாணவர்களின் வெற்றிக்கு ‘தினத்தந்தி’யில் வெளியாகும் வினா-விடை புத்தகம் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. எதிர் காலங்களில் ‘தினத்தந்தி’யின் இந்த பரிசினை மாணவர்கள் அதிக அளவில் பெறவேண்டும். அதற்கு நீங்கள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும்.

சாதனை படைக்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் இந்த பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியை தொடர்ந்து ஈட்டவேண்டும். அதற்கு மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்று பல்வேறு சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்