அ.தி.மு.க.வில் சசிகலா ஒரு போதும் சேரமாட்டார் டி.டி.வி.தினகரன் பேட்டி

அ.தி.மு.க.வில் சசிகலா ஒரு போதும் சேரமாட்டார் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2019-10-24 23:15 GMT
மன்னார்குடி,

சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவுடன் சசிகலா அ.தி.மு.க.வில் இணைவார் என்று பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். ஒரு போதும் அவர் அ.தி.மு.க.வில் சேரமாட்டார். தமிழக அரசு எதிலும் சரியாக செயல்படவில்லை. ஆளும் கட்சியாக இருப்பதால் அ.தி.மு.க அரசு இன்னும் நீடித்து கொண்டிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? என கேள்விக்குறியாக உள்ளது. அப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அதில் அ.ம.மு.க போட்டியிடும்.

அ.தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டங்களும் செயல்படவில்லை . டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முறையாக நடை பெறவில்லை. சினிமா துறையை பழிவாங்கும் நடவடிக்கையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் மலர் வேந்தன் உள்பட அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்