முத்துடையான்பட்டியில் மின்சாதன விற்பனை கடையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

முத்துடையான்பட்டியில் உள்ளமின்சாதன விற்பனை கடையில் நடந்த தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2019-10-23 23:00 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியை சேர்ந்தவர் ரமே‌‌ஷ். இவர் வெள்ளனூர் அருகே முத்துடையான்பட்டியில் மின்சாதன விற்பனை மற்றும் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு கடையின் உள் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கடை உரிமையாளர் ரமே‌‌சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், ரமே‌‌ஷ் வருவதற்குள் கடைக்குள் தீ மளமளவென பற்றி எரிந்தது.

பொருட்கள் நாசம்

இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மின்சாதன கடைக்குள் இருந்த, பைப், பெயிண்ட் உள்பட ஏராளமான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீயில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்