மும்பையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வியால் விபரீதம்

விக்ரோலியில் காதல் தோல்வி காரணமாக போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-22 23:30 GMT
மும்பை,

விக்ரோலியில் காதல் தோல்வி காரணமாக போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டுப்பாட்டு அறை

நாந்தெட் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமேஸ்வர்(வயது29). போலீஸ்காரான இவர், மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்தார். மும்பை விக்ரோலி திலக் நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து அங்கு தங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து அறைக்கு திரும்பினார். அவரது நண்பர் ஒருவர் அறைக்கு திரும்பிய போது, உள்புறமாக பூட்டாமல் கிடந்த கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது ராமேஸ்வர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை

உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது, தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதன் மூலம் அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்