வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-10-22 23:00 GMT
காரைக்குடி,

மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியது. இதையொட்டி சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 100 அடி சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் மதிமார் செலசு தலைமை தாங்கினார். இணை பொது செயலாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில இணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு உரைநிகழ்த்தினர்.

வங்கிகள் இணைப்பை கைவிடவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வங்கி சீர்திருத்த முயற்சிகளை கைவிட வேண்டும். அதிகப்படியான சேவை கட்டணங்களை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக்கூடாது. குறைந்த வட்டியில் விவசாய கடன் மற்றும் தொழில் கடன் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான ஆண், பெண் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தினால் வங்கிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. முடிவில் துைண தலைவர் அசோக் வரதராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்