டெங்கு கொசுப்புழு உற்பத்தி: தனியார் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

போடியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்த தனியார் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-10-22 22:30 GMT
போடி,

போடி நகராட்சியில் ஆணையாளர் சத்யநாதன் தலைமையில் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட துணை கலெக்டர்(பயிற்சி) நிறைமதி, ஆணையாளர் சத்யநாதன் ஆகியோர் போடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், பழைய இரும்பு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்ததாக போடி புதுக்காலனி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேவையற்ற சாமான்கள் போட்டு வைத்திருந்ததாக போடி நகரில் செயல்படும் இரும்பு கடைகள் உள்பட 5 வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் போடியில் டெங்கு கொசுப்புழுக்கள் மற்றும் கொசுக்கள் ஒழிப்பு பணிகளை நகர்நல அலுவலர் டாக்டர் ராகவன் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவர்கள் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ள தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து கண் டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்