பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் 6 வங்கிகள் குறிப்பிட்ட 4 வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி வங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் வங்கிகள் இணைப்பை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் நாடு முழுவதும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்பினர் நேற்று ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 120 வங்கி கிளைகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட வங்கிகளில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம்போல் பணிக்கு வந்திருந்தனர். இருப்பினும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை என ரூ.200 கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது. அதுபோல் ஏ.டி.எம். சேவையும் முடங்கியது.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு விழுப்புரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பொதுத்துறை வங்கிகள் இணைப்பை உடனடியாக கைவிடக்கோரியும், வங்கிகளை சீரமைக்க கோரியும், வாடிக்கையாளர் சேவையை விரிவுப்படுத்த வங்கிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத பணக்காரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.
இதில் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் மணிராதா, நாராயணசாமி, ஜெயச்சந்திரன், பாலமுருகன், அமீர்பாஷா, கண்ணையன், சொக்கநாதன், சேகர், ஷாஜகான், செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு கொள்கையை கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார். இதில் ராஜேந்திரன், கருப்பன், கோபிதா, வள்ளிஆனந்தன், ராமச்சந்தின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.