அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-10-20 22:45 GMT
தர்மபுரி, 

அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் நிர்வாகி சின்னசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்ககூடாது. மின்சார பஸ்கள் என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு அரசு துணைபோகக்கூடாது. அரசே நிதியுதவி செய்து போக்குவரத்து கழக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள்,தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்