ஆயிமுத்தாயி அம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

செந்துறை பெரிய ஏரிக்கரை அருகே, ஆயிமுத்தாயி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-10-20 22:00 GMT
செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை பெரிய ஏரிக்கரை அருகே அமைந்துள்ள ஆயிமுத்தாயி அம்மன் கோவிலில் தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோவில் பூசாரி முருகேசன் பூஜைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த 30 கிலோ செம்பு குத்துவிளக்குகள், மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றதோடு, அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்