ஆண்டிப்பட்டி அருகே, மின்சாரம் பாய்ந்து அரசு பள்ளி ஆசிரியர் சாவு

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.;

Update: 2019-10-20 21:30 GMT
கண்டமனூர், 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 39). இவர் கொழிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 18-ந்தேதி இரவு பாலக்கோம்பை அருகே ராயவேலூரில் உள்ள அவருடைய மாமாவுக்கு சொந்தமான செங்கல்சூளைக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எனவே ராமர் மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்