திருச்சி விமான நிலையத்தில் ரூ.4½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் - அரியலூர் வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.4½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்த சம்பவத்தில், அரியலூர் வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-19 22:29 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அரியலூரை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 22) தனது கைப்பையில் கனடா டாலர்கள், சுவிட்சர்லாந்து பிரான்க், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.4½ லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்