வீர்சாவர்க்கர் பற்றி விமர்சனம்: சித்தராமையா பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல - ஜெகதீஷ்ஷெட்டர் கண்டனம்
கர்நாடக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மகாத்மா காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர் வீர்சாவர்க்கர் என்று அவரை பற்றி சித்தராமையா குறை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
பெங்களூரு,
சித்தராமையாவின் பேச்சு, அவரின் பண்பை, தரம் தாழ்ந்த கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. வரலாறு தெரியாமல், பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல.
வீர்சாவர்க்கர் பற்றி பேசுவதற்கு முன்பு, சித்தராமையா வரலாற்றை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். வடகர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. கூறியிருப்பது பற்றி நான் கருத்து எதையும் தெரிவிக்க மாட்டேன். தனிப்பட்ட முறையில் அவர் பேசியிருக்கிறார். இதுபற்றி அவரிடமே போய் கேளுங்கள்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.