சிறுபான்மை மக்கள் மீதான அடக்கு முறையை அனைத்து தரப்பினரும் எதிர்க்கின்றனர் - காதர் மொய்தீன் பேச்சு
சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறையை அனைத்து தரப்பினரும் எதிர்க்கின்றனர் என்று காதர் மொய்தீன் பேசினார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே. நவாஸ்கனி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராமநாதபுரம் தொகுதியை 52 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற நவாஸ் கனிக்கு, ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரத்தில் பாராட்டு விழா மற்றும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. நவாஸ்கனி எம்.பி. வெற்றி பெற்ற காலம் முதல் ராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு செய்துவரும் பணிகளை பாராட்டியும், மீனவர்கள், விவசாயிகள் நலனில் முழு கவனம் செலுத்தியமைக்கும், இலங்கை பிரதமரை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியது.
மேலும் தொகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினையை தீர்க்க எடுத்துக்கொண்ட முயற்சி, ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதை பாராட்டி இந்த விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஏ. வருசை முகமது தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலர் முகமது யாசின், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி உள்பட பலர் பேசினர். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஏற்புரை ஆற்றினார்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் பேசியதாவது:- இன்றைய இந்தியாவில் 4,636 சமூக வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு நம்பிக்கை, கலாசாரம், தனி அடையாளம், சடங்கு, சம்பிரதாயம் உள்ளன. திருமண முறைகளில் மாநிலத்திற்கு, மாநிலம் மாறுபடும் வழக்கம் இன்றும் கூட நடைமுறையில் உள்ளது. தமிழக மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரும் ஜனநாயக முறையை பின்பற்றினர். இந்திய தேச தலைவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர், அபுல்கலாம் ஆசாத் போன்றோரும் ஜனநாயக வழிமுறையை தான் வழிகாட்டினர். 72 ஆண்டுகளாக ஜனநாயக முறையை பின்பற்றும் இந்திய அரசியல் கட்டமைப்பு, ஆட்சி முறையை ஒழித்து புதிய முறையை செயல்படுத்த பா.ஜ.க. முனைகிறது. ஒரே கட்சி ஆட்சி, சிறுபான்மையினர் மீதான அடக்கு முறையை அனைத்து அரசியல் கட்சியினரும், அனைத்து தரப்பினரும் எதிர்க்கின்றனர்.
மதசார்பற்ற கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனியை வெற்றிபெறச் செய்து பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டினர். இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் மனித வாதியே. முஸ்லிம்களுக்கு பிற மதத்தினர் அனைவரும் சகோதரர்களே. இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ரபிக்குர் ரகுமான் நன்றி கூறினார்.