எஸ்.புதூரில் சிறப்பு மருத்துவ முகாம்
எஸ்.புதூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி உத்தரவின் பேரில் முசுண்டபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராகவேந்திரன் தலைமை தாங்கினார். ராமசாமி குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் எடை, உயரம் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ரத்தத்தில் இரும்பு சத்து அளவு, கொழுப்பின் அளவு, சர்க்கரை அளவு, மலேரியா ரத்தத் தடவல், ஈ.சி.ஜி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய பாப் தடவல், பரிந்துரையின் பேரில் அல்ட்ரா சோனாகிராம், சிறுநீரில் உப்பு, இரத்த அழுத்த பரிசோதனை, கண்புரை நோய் பரிசோதனை, குழந்தை மருத்துவம், பொது மருத்துவம், பால்வினை நோய் பரிசோதனை, ஸ்கேன், பல் மருத்துவம், சளி பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் அங்கன்வாடி மையம் சார்பில் போசன் அபியான் திட்டத்தின் கீழ் சத்து கொழுக்கட்டை, முளைகட்டிய பாசிபயறு வேகவைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் இரும்பு சத்து உள்ள உணவுகள், நோய் எதிர்ப்பு சத்து உணவுகள், குறித்த படங்கள், மற்றும் சக்தி தரும் உணவு, வளர்ச்சி தரும் உணவு, பாதுகாப்பு தரும் உணவு, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, முளைகட்டிய தானியங்கள் குறித்த மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முசுண்டபட்டியில் உள்ள 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலமாக குளோரின் கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், கணேசன் மற்றும் முசுண்டபட்டி ஊராட்சி செயலர் பொன்னுக்காளை செய்திருந்தனர்.