ஊட்டச்சத்து மாவு தொழிற்சாலையில் கலெக்டர் திடீர் ஆய்வு
தளவாய்புரத்தில் ஊட்டச்சத்து மாவு தொழிற்சாலையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் ஜீவா நகரில் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் சார்பில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மாதந்தோறும் சுமார் 200 டன் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவு தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலை இன்று பகல் 11 மணிக்கு மாவட்ட சமூக நலத்துறை செயலாளர் மதுமதி ஐ.ஏ. எஸ்., விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இங்கு எவ்வாறு குழந்தை களுக்கான ஊட்டச்சத்து மாவு தயார் செய்யபடுகிறது, அவற்றின் தரம், சுகாதாரம் பற்றி அதிகாரிகள் கேட்டு அறிந்தனர். இவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சமூக நல பொறுப்பு அலுவலர் ராஜன், திட்ட அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, தாசில்தார் ஆனந்தராஜ், மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சுதாகர், தளவாய்புரம் தொழிற்சாலை செயல் அலுவலர் புவனேசுவரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.