அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையினர் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.;

Update: 2019-10-18 22:45 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை திலகர் திடலில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை மற்றும் பட்டதாரி இளைஞர்கள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் நிறுவனர் தினகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ அறிவிப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதல்நிலை தேர்வின் கேள்விகள் பழைய பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட வேண்டும். முதன்மை தேர்வில் இடம்பெற உள்ள தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்பு வினாக்களுக்கு பதிலாக தமிழ் இலக்கண வினாக்கள் இடம் பெற வேண்டும். தமிழக அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய வேலை வாய்ப்புகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை நிர்வாகிகள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

மேலும் செய்திகள்