தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - நாகூர் அருகே நடந்தது

நாகூர் அருகே தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-18 22:15 GMT
நாகூர்,

நாகூர் அருகே ஒக்கூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் அட்வான்ஸ் தொகையை உடனே வழங்கக்கோரி ஒக்கூர் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க நாகை மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். 

சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சிந்தனையழகன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் கலைஞர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் சேரன்செங்குட்டுவன், சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க நாகை மாவட்ட தலைவர் ஜீவா ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஒக்கூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க செயற்குழு உறுப்பினர் முருகேசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்