தீபாவளி பரிசாக கார் கொடுப்பதாக ரூ.2 லட்சம் நூதன மோசடி
தீபாவளி பரிசாக கார் கொடுப்பதாக ஆசைக்காட்டி கட்டிடத்தொழிலாளியிடம் நூதனமுறையில் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் ஏகாம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வினோத்(வயது 28). கட்டிடத்தொழிலாளி. இவரது செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது அவர், “குலுக்கல் முறையில் நீங்கள் தீபாவளி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளர்கள். ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், உங்களுக்கு தீபாவளி பரிசாக கிடைக்கும்” என்றார்.
அதை உண்மை என்று நம்பிய வினோத், “கார் எப்போது பரிசாக கிடைக்கும்?. நான், எங்கே வந்து வாங்கவேண்டும்?” எனகேட்டார்.
அதற்கு போனில் பேசிய மர்மநபர், “நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தவுடன், உங்கள் வீடு தேடி வந்து சொகுசு காரை கொடுப்போம்” என்றார்.
அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த வினோத், மர்மநபர் சொன்ன வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தார். பின்னர் மர்மநபரை தொடர்புகொள்ள முயற்சி செய்தார்.
ஆனால் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. வங்கி கணக்கில் பணம் சேர்ந்தவுடன், மர்மநபரும் வினோத்துடன் தொடர்பு கொண்டு பேசவில்லை.
அதன்பிறகுதான் மர்மநபர், தன்னிடம் நூதன முறையில் ரூ.2 லட்சத்தை மோசடி செய்துவிட்டது வினோத்துக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர், மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவளி பரிசாக கார் கொடுப்பதாக ஆசைக்காட்டி ரூ.2 லட்சத்தை சுருட்டிய மோசடி ஆசாமியை தேடி வருகிறார்கள்.