ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. கடம்பூரில் காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு,
தமிழகத்தில் வெப்பம் அதிகமான மாவட்டங்களில் ஒன்று ஈரோடு. மழை மறைவு பிரதேசமாக விளங்கும் ஈரோட்டில் மழை பெய்வது கூட அதிசயம்தான். கடந்த சில ஆண்டுகளாக அண்டை மாவட்டங்களை விட மிகக்குறைந்த அளவு மழை அளவுதான் ஈரோடு மாவட்டத்தில் பதிவாகி இருக்கிறது. அதிலும் ஈரோடு பகுதி முற்றிலும் மழை இல்லாத பகுதியாகவே இருக்கும். கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் மழை பெய்தால் ஈரோட்டில் லேசான வாடைக்காற்றும், கரு மேகங்களின் ஊர்வலமும், இடி சத்தம், மின்னல் ஒளி ஆகியவற்றை மட்டுமே இயற்கை ஈரோட்டுக்கு காட்டும்.
ஆனால் இந்த பருவகாலத்தில் வழக்கத்துக்கு மாறாக ஈரோட்டில் தொடர்ந்து சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. காலை, மாலை, மதியம், இரவு என்று நினையாத நேரத்தில் வானில் இருந்து மழை பொழிகிறது.
நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு ஆங்காங்கே மழை பெய்யத்தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பொழியாமல், விட்டு விட்டு பெய்தது. குமலன்குட்டை, வீரப்பன்சத்திரம், பன்னீர்செல்வம் பூங்கா உள்பட அனைத்து பகுதிகளிலும் 15 நிமிடம் முதல் சுமார் 1 மணி நேரம்வரை மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் பிரப் ரோடு, குமலன்குட்டை, முனிசிபல்காலனி, மணிக்கூண்டு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாக்கடை ஓடைகள் நிரம்பி தண்ணீர் ஆறுபோல் சாலைகளில் ஓடியது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் வெள்ளம் அதிக அளவு சென்றது.
கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதால் ‘குளு குளு’ பருவநிலைக்கு ஈரோடு மாறி இருக்கிறது. சிறு தூறல், கனத்த மழை என்று மாறி மாறி பெய்கிறது. கடுமையான வெப்பத்தை அனுபவித்து வரும் ஈரோடு மக்களுக்கு இது மகிழ்ச்சியான பருவநிலையாக இருக்கிறது.
ஆனால், ஈரோட்டில் பழுதடைந்த சாலைகளில் பயணம் செய்வதுதான் பெரிய சிரமமாக இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளத்தின் தன்மை தெரியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். ஜல்லி கற்கள் புதைபடாமல் கிடப்பதால் மோட்டார் சைக்கிள் சக்கரம் ஏறும்போது தடுமாற வைக்கிறது. பெரிய வாகனங்களின் சக்கரத்தில் சிக்கும் கற்கள் தூக்கி வீசப்பட்டு பிற வாகன ஓட்டிகள் அல்லது பாதசாரிகள் மீது விழுகிறது. இதனால் பலரும் காயம் அடைகிறார்கள். மற்றபடி மழை காரணமாக ஈரோட்டில் 2 நாட்களாக புழுதி இல்லை என்கிற நிம்மதி ஏற்பட்டு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தார்கள்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மதியம் மழை பெய்தது.
டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் கனமழை கொட்டித்தீர்த்தது. அதனால் கடம்பூர் செல்லும் வழியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் அருவிகள் தோன்றி உள்ளன. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை மறைத்த படி சென்றது. நேற்று பகல் 2 மணி அளவில் சத்தி-கடம்பூர் ரோட்டில் அதிக அளவு வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது காத்திருந்த வாகன ஓட்டிகள் வெள்ளப்பெருக்கை செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள்.
கொடுமுடி, சாலைப்புதூர், நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3½ மணி அளவில் இருந்து 4 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. ஊஞ்சலூர், கொளாநல்லி, கருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாைல 3 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது.
அந்தியூர், புதுப்பாளையம், செல்லம்பாளையம், எண்ணமங்கலம் மற்றும் பர்கூர் மலை பகுதியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின்னர் பகல் 2½ மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. கமார் 1 மணி நேரம் நிற்காமல் மழை கொட்டித்தீர்த்தது. அந்தியூர் பகுதியில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பவானி, கோபி, கடத்தூர், சென்னிமலை, பெருந்துறை, நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி பகுதயிலும் நேற்று சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை பதிவான மழை அளவு(மி.மீட்டர் அளவில்) விவரம் வருமாறு:-
வரட்டுப்பள்ளம் -31
குண்டேரிபள்ளம் -16
நம்பியூர் - 13
கொடிவேரி -12.2
கவுந்தப்பாடி -8.2
பவானி -6.6
தாளவாடி -6.2
கோபி -5
சென்னிமலை -4
பெருந்துறை -3
பவானிசாகர் -2.8
அம்மாபேட்டை -2.8
சத்தியமங்கலம் -2
கொடுமுடி -2
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.