கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தரக்கோரி, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-10-15 22:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, மண்டல துணை தாசில்தார் ராமகிரு‌‌ஷ்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், இடைசெவல் நாற்கரசாலையில் இருந்து கார்த்திகைபட்டி வரையிலும் ரூ.2 கோடியே 4 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள குருமலைக்கு செல்லும் ஓடை வழியாக விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் அந்த ஓடை வழியாக யாரும் செல்லக்கூடாது என்று சிலர் தடுத்து வருகின்றனர். எனவே விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு பாதை வசதி செய்துதர வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்