தேவாலயத்துக்கு சென்று வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - போக்சோ சட்டத்தில் விவசாயி கைது

கொடைக்கானலில் தேவாலயத்துக்கு சென்று விட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-15 22:30 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது தம்பியுடன் நேற்று முன்தினம் தேவாலயத்துக்கு சென்று வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது அங்குள்ள புதரில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவர் சிறுமியின் தம்பியை தாக்கிவிட்டு அவளை பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சல் போட்டாள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த வாலிபர் சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கொடைக்கானல் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது வில்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த அந்தோணி பீட்டர் ராஜா (வயது 35) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விவசாயியான இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்