முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள வடக்கு பள்ளியமேடு பகுதியை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 70). விவசாயி. இவர் சம்பவத்தன்று நாச்சிக்குளத்தில் இருந்து வடக்கு பள்ளியமேட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாச்சிக்குளம் கடைவீதியில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், அரசப்பன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரசப்பன் நேற்று உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.