பள்ளிக்கூட பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி; உடலை எடுக்க போலீசார் வராததால் போக்குவரத்து நெரிசல்
மாம்பாக்கம் அருகே தனியார் பள்ளி பஸ்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த எலக்ட்ரீசியன் உடல் நசுங்கி பலியானார். இறந்துபோன வாலிபரின் உடலை எடுக்க போலீசார் விரைந்து வராததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில் வேலம்மாள் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு மாம்பக்கத்திலிருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சென்னை மேடவாக்கம் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 27) என்ற எலக்ட்ரீசியன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு மாம்பாக்கம் குளம் அருகே வந்தபோது, எதிரே வந்த பள்ளி பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வராததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.