வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நாளை கடைசி நாள்
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.
நாகப்பட்டினம்,
கடந்த (மார்ச்) மாதம் 26-ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவடைவதால் வாக்காளர் பின்வரும் ஆவணங்களான கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, உழவர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அரசு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
ஒத்துழைக்க வேண்டும்
வாக்காளர் உதவி மைய மொபைல் செயலி, வாக்காளர் சேவை மையம், அரசு இ-சேவை மையம், பொது சேவை மையம் மற்றும் வாக்கு சாவடி நிலைய அலுவலர்களிடம் அளிக்கலாம். மேலும் விவரங்கள் அனைத்தும் நாளை வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் விவரங்களை சரிபார்த்திடவும், விடுபட்ட பெயர்களை சேர்த்திடவும், இறந்த மற்றும் இடமாறியவர்களின் தகவல்களை அளித்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.