ரோந்துபணியின் போது போலீஸ்காரரை தாக்கிய மீன் வியாபாரி கைது
ரோந்துபணியின் போது போலீஸ்காரரை தாக்கிய மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
காலாப்பட்டு,
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரும் மற்றொரு போலீஸ்காரரும் சம்பவத்தன்று பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை அங்கிருந்து அகற்றுமாறு போலீஸ்காரர் பூபாலன் அந்த நபரிடம் கூறினார்.
ஆனால் குடிபோதையில் இருந்த அந்த நபர் போலீஸ்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீஸ்காரர் பூபாலனை கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீஸ்காரர் பூபாலன் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசத்திடம் முறையிட்டார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ்காரர் பூபாலனை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த மீனவர் சந்திரன்(48) என்பது தெரியவந்தது.
தலைமறைவான சந்திரனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவரது செல்போனை ஆய்வு செய்த போது பரங்கிபேட்டை பகுதியை காட்டியது. இதனை தொடர்ந்து போலீசார் பரங்கிபேட்டைக்கு விரைந்தனர். அங்கு தனியார் விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த சந்திரனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.