மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு

மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-11 22:30 GMT
மல்லசமுத்திரம், 

திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் கருமனூர் பெரியகாடு பகுதியில் வசிப்பவர் பழனிசாமி மகன் பழனி (வயது 30). இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு இரவு படுத்து தூங்கினர்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த வளையல், செயின், மோதிரம் உள்பட 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதேபோல பிரபு வீட்டிற்கு சற்று அருகே பருவங்காடு பகுதியில் வசித்து வரும் விவசாயி மாரிமுத்து (75), இவரது மனைவி முத்தாயி (70) இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் படுத்து தூங்கினர்.

அதிகாலை ஆடுகளை பட்டியில் கட்டி விட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வந்த முத்துசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

அதே பகுதியில் தாய் ராசம்மாள் மற்றும் மகன் தேவராஜ் (8) ஆகியோருடன் வசித்து வந்த கணவரை இழந்த நித்யா (35) என்ற பெண் வீட்டிலும் பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம், 2 வெள்ளிக்கொடி, வாகனங்களின் ஆவணங்கள் ஆகியவை திருட்டு போனது.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த 3 திருட்டு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகமும் விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்