மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் இமானுவேல், ஒன்றிய பொறுப்பு செயலாளர் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில குழு உறுப்பினர் இடும்பையன் கலந்து கொண்டு பேசினார்.
மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் ஏற்படும் பாதாள சாக்கடை உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும். மயிலாடுதுறை நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்ததால், உடனே புதிதாக பாதாள சாக்கடை திட்டத்திற்குரிய நிதியை அரசிடம் இருந்து பெற்று அமல்படுத்த வேண்டும். மயிலாடுதுறையில் பல தெருக்களில் பாதாள சாக்கடை உடைப்பில் இருந்து கழிவுநீர் வழிந்தோடுவதாலும், சில குளங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதாலும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கட்சி பொறுப்பாளர்கள் சர்புதீன், அன்புரோஜ், மோகன்ராஜ், பிரதீப், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.