திருப்பூர் மார்க்கெட்டில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்
திருப்பூர் மார்க்கெட்டில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் அலைமோதினர். பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்,
ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆயுத பூஜைக்கு தேவையான முக்கிய பொருட்களான கரும்பு, வாழைமரம், பொரிகடலை, பழ வகைகள், தேங்காய், வெள்ளைபூசணி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக திருப்பூர் மார்க்கெட்டில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. மதுரை, திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் இருந்து கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. தரத்தை பொறுத்து ஒரு ஜோடி கரும்பு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வாழை மரகன்றுகள் ஒரு ஜோடி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப் பட்டது. தாராபுரம், உடுமலை, அவினாசி ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பொரி ஒரு பக்கா ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.120-க்கும் நிலக்கடலை ஒரு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப் பட்டது.
ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160-க்கும், ஆரஞ்சு ரூ.100-க்கும், மாதுளை ரூ.120-க்கும், சாத்துக்குடி ரூ.120-க்கும், திராட்சை ரூ.160-க்கும், கொய்யா ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பழங்களின் விலையும் வழக்கத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் 20 வரை உயர்ந்திருந்தது. ஆயுத பூஜையில் முக்கிய பங்கு பெறும் வெள்ளை பூசணி திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பூசணி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜை முடிந்து திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காயை சுற்றிப்போட்டு உடைப்பது வழக்கம். எனவே பூஜை பொருட்கள் பட்டியலில் பூசணி இடம் பெற்றிருப்பதால் அதன் விற்பனை அமோகமாக இருந்தது.
பூமார்க்கெட் அருகே மாவிலை ஒரு கட்டு ரூ.10-க்கும், தென்னங்குறுத்து ஓலையால் செய்யப்பட்ட தோரணம் ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல பல்வேறு வண்ணங்களில் கோலப்பொடி, சாமி படங்கள், பிளாஸ்டிக் ஜரிகையால் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்கார பொருட்கள், தோரணங்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கமாக ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு தலைவாழை இலை நேற்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. தேங்காய், எலுமிச்சம்பழம், வாழைப்பழம் விலையும் வழக்கத்தை விட 50 சதவீதம் வரை விலை உயர்ந்திருந்தது. அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக இருந்தாலும் விற்பனை நன்றாக இருந்தது. இனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆயுத பூஜையையொட்டி அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடு என உயர்ந்திருந்தது. அநத வகையில் நேற்று முன் தினம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1,000-க்கும், ரூ.280-க்கு விறகப்பட்ட செவ்வந்தி ரூ.300-க்கும், ரூ.280-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூஜை பொருட்களை வாங்க பொது மக்கள் மார்க்கெட்டில் அதிக அளவில் குவிந்ததால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திண்டாடினார்கள். வீரராகவபெருமாள் கோவில் சுற்றுச்சுவரையொட்டி ஏாளமானவர்கள் நடைபாதை கடை போட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அந்த நடைபாதை கடைகளுக்கு முன் நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் பூ மார்க்கெட் ரோடு, பெருமாள் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசிகடை வீதி, ஆகிய இடங்களில் வாகன நெருக்கடியும், மக்கள் கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்தது.

அதே சமயம் நேற்று முன்தினம் ரூ.280-க்கு விற்கப்பட்ட சம்பங்கி நேற்று ரூ.200-க்கும் ரூ.100-க்கு விற்கப்பட்ட பட்டுப்பூ. ரூ..70-க்கும் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. ரூ.600-க்கு விற்கப்பட்ட முல்லை, ரூ.480-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ஆகியவை அதே விலைக்கு நேற்றும் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து பூ மொத்த வியாபாரிகள் கூறும் போது, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மழையில் நனைந்த நிலையில் பூக்கள் தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. செவ்வந்தி, அரளி, மல்லிகை ஆகிய பூக்களின் விற்பனை நன்றாக இருந்தது. மற்ற பூக்களின் விற்பனை சுமாராகவே நடைபெற்றது. இதனால் அந்த பூக்களின் விலையை குறைத்து விற்பனை செய்தோம் என்றனர். பூக்களை வாங்க ஏராளமான மக்கள் பூ மார்க்கெட்டுக்குள் குவிந்ததால் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த னர்.