கடையின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில் கடையின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஹாஜியார் தெருவில் செல்போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருபவர் அப்துல்கலாம்ஆசாத் (வயது 42). இவர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அப்துல்கலாம் ஆசாத்தின் கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து, அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
30 செல்போன்கள் திருட்டு
தகவல் அறிந்ததும் அப்துல்கலாம் ஆசாத் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 30 விலை உயர்ந்த செல்போன்களை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்துல் கலாம் ஆசாத் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.