சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் 36 வருவாய் கிராமங்கள் பாதிக்காத வகையில் அமைக்க நடவடிக்கை
36 வருவாய் கிராமங்கள் பாதிக்காத வகையில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.;
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் கடந்த மாதம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில், ஊர், ஊராக சென்று பொதுமக்களை சந்தித்து இந்த மண்டலம் தொடர்பாக கருத்து கேட்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் தற்போது நடந்து முடிந்த பல கிராம சபை கூட்டங்களில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தளவாய்சுந்தரத்திடம் மனு
இந்த நிலையில் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வீரசந்திரன் தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார் உடன் இருந்தார். அந்த மனுவில், சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் வேண்டாம். இந்த மண்டலம் அமைந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று கூறியிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட தளவாய்சுந்தரம், அவர்கள் மத்தியில் பேசினார்.
பாதிக்காத வகையில்...
அப்போது அவர் கூறுகையில், சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். குமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம். மாவட்ட வனப்பகுதியில் 36 வருவாய் கிராமங்களை கொண்டது. இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரிடம் பேசி சூழலியல் மண்டலத்தை சீரோ பாய்ண்ட் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, 36 வருவாய் கிராமங்களும் பாதிக்காத வகையில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.