மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-03 22:45 GMT
புதுக்கோட்டை,

அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். கிளை நாகராஜ் தலைமை தாங்கினார். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட தொகையை அரசே வழங்க வேண்டும். கடந்த 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி, ஆலங்குடி

இதேபோல பொன்னமராவதி போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அடைக்கன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் யோகராஜ் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆலங்குடி போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இலுப்பூர் போக்குவரத்து பணிமனை அருகே எல்.பி.எப். தலைவர் சேது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்