அரசு ஊழியரை மிரட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
வேப்பந்தட்டை அருகே அரசு ஊழியரை மிரட்டி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் எதிரே வசித்து வருபவர் மணிவண்ணன்(வயது 50). இவர் வேப்பந்தட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(44). இவர்களுக்கு, சொந்த ஊரான பசும்பலூரில் விவசாய நிலம் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால் மணிவண்ணன் மற்றும் சித்ராதேவி ஆகிய இருவரும் வயலுக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 2 பேர் அங்கு வந்து மணிவண்ணனை பிடித்து கீழே தள்ளி கழுத்தில் கத்தியை வைத்து தங்க சங்கிலியை கேட்டு மிரட்டினர்.
பின்னர் அவரது மனைவி யிடம் தாலி சங்கிலியை கொடு, இல்லையென்றால் கத்தியால் குத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால், உயிருக்கு பயந்து மணிவண்ணன், தான் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியையும், சித்ராதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியையும் கழற்றி முகமூடி கொள்ளையர்களிடம் கொடுத்தார். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.4 ஆயிரம், 2 செல்போன்களையும் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
போலீசார் வலைவீச்சு
இந்த சம்பவம் தொடர்பாக மணிவண்ணன் நேற்று கொடுத்த புகாரின் பேரில், வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜாவின் மனைவி சங்கீதாவிடம், 3 முகமூடி கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும், தற்போது நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களும் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.