குப்பையில் இருந்து மர்ம பொருள் வெடித்ததில் பெண் படுகாயம் போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே குப்பையில் புதைந்திருந்த மர்ம பொருள் வெடித்ததில் பெண் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்லையன். இவருடைய மனைவி மல்லிகா (வயது 55). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள குப்பைமேடு அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது குப்பைக்குள் புதைந்திருந்த ஒரு மர்ம பொருள் திடீரென வெடித்தது. அப்போது குப்பை மேட்டில் இருந்து புகை அதிக அளவு கிளம்பியவாறு இருந்தது.
மர்ம பொருள் வெடித்தபோது வெடி குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு சென்று பார்த்தனர். மர்ம பொருள் வெடித்ததில் மல்லிகாவுக்கு முகம், கண் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மல்லிகா அலறித்துடித்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் வடசேரிக்கு சென்று குப்பை மேட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறிய இடத்தில் இருந்து துகள்களை கைப்பற்றி சென்றனர்.
இதில் இருந்து குப்பை மேட்டில் புதைந்திருந்தது வெடிகுண்டா? அல்லது வேறு ஏதாவது மர்ம பொருளா? என கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.