கும்மிடிப்பூண்டி அருகே விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே இயற்கை உரம் உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பாப்பன்குப்பம் கிராமம். இந்த பகுதியில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உட்பட்ட குப்பைகளை ஒன்று சேர்த்து தரம் பிரித்து அதனை சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து இயற்கை உரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்திடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை பாப்பன்குப்பம் கிராமத்தில் செயல்படுத்துவதால் ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ள அந்த கிராமத்தில் மேலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற புகார் எழுந்து உள்ளது.
இந்த திட்டத்தை வரவேற்கும் அந்த பகுதி மக்கள், இந்த திட்டத்தை செயல்படுத்திட வேறு ஒரு இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் பாப்பன்குப்பம் கிராமத்தில் இயற்கை உரம் உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட கோரி நேற்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அந்த பகுதி கிராம மக்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அளித்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.