மெஞ்ஞானபுரம் அருகே, கிராம மக்கள் உண்ணாவிரதம் - பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

மெஞ்ஞானபுரம் அருகே பகுதிநேர ரேஷன் கடை அமைக்கக்கோரி, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-10-02 22:00 GMT
மெஞ்ஞானபுரம், 

மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளை கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோப்பூரில் உள்ள ரேஷன் கடையில் சென்று உணவுப்பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைப்பதற்கு மின் இணைப்புடன் கூடிய கட்டிடத்தை இலவசமாக வழங்கவும், போக்குவரத்து செலவை ஏற்பதற்கும் ஊர்நல கமிட்டியினர் முன்வந்தனர். ஆனாலும் அங்கு பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படவில்லை.

எனவே தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அங்குள்ள தெருக்களிலும் கருப்புக்கொடி ஏற்றி இருந்தனர்.

மேலும் செய்திகள்