புனே கோத்ருட் தொகுதியில் போட்டியிடும் சந்திரகாந்த் பாட்டீலுக்கு உள்ளூர் பா.ஜனதாவினர் ஆதரவு கிடைக்குமா?
புனே கோத்ருட் தொகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் போட்டியிடுகிறார். அவர் வெளியூரை சேர்ந்தவர் என்பதால், கோத்ருட் தொகுதி பா.ஜனதாவினரின் ஆதரவு அவருக்கு கிடைக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாநில பா.ஜனதா தலைவரும், புனே மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் உள்ள கோத்ருட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த தொகுதியின் தற்போதைய பா.ஜனதா எம்.எல்.ஏ. மேத்தா குல்கர்ணிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
60 வயதாகும் சந்திரகாந்த் பாட்டீல் கோலாப்பூரை சேர்ந்தவர். தனது அரசியல் வாழ்வில் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
கோத்ருட் தொகுதியில் சந்திரகாந்த் பாட்டீல் களம் இறக்கப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. அவர் புனேயை சேர்ந்தவர் இல்லை என்பதால் கோத்ருட்டை சேர்ந்த பா.ஜனதாவினர் மத்தியில் அதிருப்தி உண்டானது.
உள்ளூரை சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சந்திரகாந்த் பாட்டீல் கோத்ருட் வேட்பாளராக போட்டியிடுவதால் மேத்தா குல்கர்ணியும் அதிருப்தியில் இருந்தார். இந்தநிலையில், சந்திரகாந்த் பாட்டீல் கோத்ருட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேத்தா குல்கர்ணி தனது ஆதரவை தெரிவித்தார்.
புனே நகர பா.ஜனதாவினரும் சந்திரகாந்த் பாட்டீலை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், நான் புனேக்கோ, கோத்ருட்கோ வெளியாள் அல்ல. நான் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்த காலத்தில் இருந்தே இங்கு செயலாற்றி வருகிறேன்.
எனவே புனே நகர மக்கள் என்னை வெளியாளாக கருதமாட்டார்கள் என்றார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூரில் சந்திரகாந்த் பாட்டீலை நிறுத்தினால் அது அவருக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்பதை கருத்தில் கொண்டே அவர் கோத்ருட் தொகுதியில் களம் இறக்கப்பட்டு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.