கம்பத்தில், மது விற்றவர் கைது - 109 பாட்டில்கள் பறிமுதல்

கம்பத்தில், மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து 109 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-02 21:45 GMT
கம்பம்,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்படி திருட்டுத்தனமாக மது விற்பவர்களை பிடிக்க, கம்பம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது மணிகட்டி ஆலமரம் பகுதியில் உள்ள 18-ம் கால்வாய் அருகே கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த பாண்டியன் (வயது 49) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவரிடமிருந்து 109 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்