சேலம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளை

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;

Update: 2019-10-01 21:45 GMT
சேலம், 

சேலம் அருகே அல்லிக்குட்டை பாரதியார் நகரை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 61). சேலம் மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தனது 61-வது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் கோவிலுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டார்.

இதன்படி உறவினர்களுடன் தனி பஸ்சில் நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டு சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நள்ளிரவு அனைவரும் சேலம் திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து முத்துமாணிக்கம் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்