ஒரத்தநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஒரத்தநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பனையக்கோட்டை தெற்கு கொண்டையார் தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் கிணற்றில் பழுது ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக குடிநீருக்காக சிரமப்பட்ட கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தஞ்சை-மன்னார்குடி சாலையில் பனையக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.