மேம்பாலத்தில் கொட்டிக்கிடந்த எண்ணெய்யில் வழுக்கி விழுந்து மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
மேம்பாலத்தில் கொட்டிக்கிடந்த எண்ணெய்யில் வழுக்கி விழுந்து மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்,
திண்டிவனம் தாலுகா பெருமாள்பேட்டை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 32). இவர், சென்னை சேலையூரை அடுத்த கோவிலாஞ்சேரியில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார்.
நேற்று காலை அரிதாஸ், சைதாப்பேட்டையில் இருந்து வேளச்சேரி மெயின் ரோடு வழியாக பள்ளிக்கரணை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். பள்ளிக்கரணை மேம்பாலத்தில் சென்றபோது சாலையில் எண்ணெய் கொட்டிக்கிடந்தது.
இதனை கவனிக்காமல் அதன் மீது அரிதாஸ் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது எண்ணெய்யில் வழுக்கியதால் கட்டுப்பாட்டை மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயம் அடைந்த அரிதாஸ், அதே இடத்தில் மூளை சிதறியும், தோள்பட்டை எலும்பு முறிந்தும் பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அரிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து நடப்பதற்கு சிறிதுநேரத்துக்கு முன்புதான் அந்த மேம்பாலம் வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் எண்ணெய் கொட்டி உள்ளது. அதில் ஒருவர் வழுக்கி விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அதன்பிறகுதான் அரிதாசும், எண்ணெய்யில் வழுக்கி விழுந்து பலியாகி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சாலையில் கொட்டிக்கிடந்த ஆயில் மீது போக்குவரத்து போலீசார் மணலை கொட்டி சரி செய்தனர்.